தர்மபுரி மாவட்டம் ஏலகிரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவரின் வெளிப்பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.