குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-03-02 09:50 GMT

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகம் வாசித்து பயன் அடைகின்றனர். இந்த நிலையில் இந்த நூலகத்தின் தென்புறம் சமீபகாலமாக இயற்கை உபாதை கழித்தல் மற்றும் குப்பைகளை கொட்டுதல் உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு வருவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்