விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.