காரைக்கால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் உணவு பொருட்களின் கழிவுகளை அங்கேயே வீசி செல்வதால் கடற்கரையில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இது பொதுமக்களுக்கும், கடற்கரையில் விளையாடி மகிழும் குழந்தைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை அகற்றவும், உணவு பொருட்களின் கழிவுகளை கடற்கரையில் போடாத வகையிலும் அதிகாரிகள் தடுக்க வேண்டும்.