புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஏழூர் கிராமத்தில் உள்ள ரோட்டோரம் பள்ளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?