இறைச்சி கழிவுகள்

Update: 2025-02-23 09:54 GMT

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் அருகே குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு குப்ைபகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்