கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் சிற்றருவி ஓடுகிறது. இந்த அருவி நீர் அங்கிருந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று விழுகிறது. இந்த சிற்றருவியை பார்ப்பதற்காகவும், அதில் குளிப்பதற்காகவும் வருவோர் இந்தப்பகுதியை குப்பை மேடாக மாற்றி வருகின்றனர். மேலும் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களையும், குப்பைகளையும் செல்லும் வழியில் உள்ள படிகட்டுகள், மலைப்பகுதியில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். எனவே சுற்றுலா தலமான இந்த பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குப்பைகள் போடாத வகையில் பராமரிக்கவும் இங்கு குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.
-ராஜாராம், சேந்தமங்கலம்.