பாலக்கோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யவும், காய்கறி பழங்களை பதப்படுத்தவும் அரசு சார்பில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளது. வேளாண் விற்பனை கூட பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள், அழுகிய பழங்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னசாமி, பாலக்கோடு.