குவிந்து கிடக்கு குப்பைகள்

Update: 2025-02-16 13:58 GMT
புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரம் கடைவீதியில் மளிகைக்கடை, பூக்கடை, டீக்கடை உணவு விடுதி, டூவிலர் விற்பனைக் கடை, உரக்கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. கடைகளில் வியாபாரம் முடிந்த பின்பு குப்பைகளை அப்பகுதியில் வியாபாரிகள் குவித்து வைப்பார்கள். அதனை தினமும் துப்புரவு தொழிலாளர்கள் அப்புறப் படுத்தி வந்தனர். தற்போது கடந்த 15 நாட்களாக கடைவீதிகளில் குவிந்துள்ள குப்பைகளை சரியாக அள்ளாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்படுள்ளது. எனவே குவிந்துள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்