பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி. களத்தூர் கிராமம் ஆற்று பாலம் ஓரமாக குப்பைகள், கழிவு பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் வந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.