நாகர்கோவில் அருகில் உள்ள சங்குதுறை கடற்கரை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக காணப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் நாகர்கோவில் பகுதி மக்கள் ஏராளமானோர் சங்குத்துறை பகுதிக்கு வந்து கடல் அழகை ரசித்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் தின்பண்டங்கள் சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போடுகின்றனர். இதனால், கடற்கரையும், கடல் நீரும் மாசடைகிறது. எனவே, பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக கடற்கரை பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.