வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்ப்பட்டி முனியப்பன் கோவில் அருகே குப்பைகளை கொட்டுவதால் குப்பை மலை போல் குவிந்துள்ளது. இதனை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால் பிளாஸ்டிக் காகிதங்கள், குப்பைகள் சாலைகளில் காற்றில் பறந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முறையாக குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செந்தில், அளவாய்ப்பட்டி.