சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் மார்க்க பந்து ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.