குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-19 14:50 GMT

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி அருகே உள்ள அனுமன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்