மேல்மலையனூர் அருகே வளத்தி கிராமத்தில் சுகாதார நிலையம் செல்லும் சாலையில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.