குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-19 10:42 GMT

நாஞ்சிக்கோட்டை போஸ்டல் காலனி 4-வது தெரு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகள் குவிந்து கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் இரை தேடி பன்றிகள் அதிகளவில் வருகின்றன. இவை குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்