ஆத்தூர் தாலுகா மாலையப்பட்டி சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். மேலும் அவற்றை தீ வைத்தும் எரித்துவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதுடன், தீ வைத்து எரிப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.