சுகாதார சீர்கேடு

Update: 2025-01-12 16:43 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் தனியார் ஓட்டல் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டு இருப்பதால், மழை பெய்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமன், நாமக்கல்.

மேலும் செய்திகள்