சுகாதார சீர்கேடு

Update: 2025-01-12 08:05 GMT

புத்தேரி குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்திற்குள் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்திற்குள் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன் அதனை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், குளத்தின் கரையில் எச்சரிக்கை பதாகைகள் வைத்து குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-பூதப்பிள்ளை, புத்தேரி.

மேலும் செய்திகள்