குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-05 17:42 GMT
மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பு அருகே பொரசப்பட்டு செல்லும் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்