கருப்பு கேட் அடுத்து அமைந்துள்ளது வீராட்டிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கோவிலின் பின்புறமுள்ள சாலையில் கால்நடைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் அதில் வழுக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.