கடலூர் அடுத்த நடுவீரப்பட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரே பாலம் உள்ளது. அதன் கீழ் பகுதியில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அதன் வழியை மழைநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.