திருச்செங்கோடு நகரின் மைய பகுதியான தெப்பக்குளம் அருகில் சந்தைபேட்டையில் பிளாஸ்டிக் கவர்கள், இதர கழிவுகளை மொத்தமாக கொட்டி எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகில் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா்களுக்கு மூச்சு திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குப்பைகளை எரிப்பதால் சாம்பல் முழுவதும் தெப்பக்குளம் நீரில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை எரிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துக்குமார், திருச்செங்கோடு.