குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-29 11:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சண்முகா நகர் அருகே அம்மன்குளத்தில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும்
துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்