திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகர், ஐஸ்வர்யாநகர், ரமணமகரிஷி நகர் உள்ளிட்ட பகுதிளில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றில் குப்பைகள் பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.