தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தமிழ்பல்கலைக்கழக 4-ம் எண் குடியிருப்பில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இதன் அருகே குப்பைகள், மரத்தின் கிளைகள் கொட்டப்பட்டு இருக்கின்றன. குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.