வடலூர் அருகே வடலூர்- சென்னை சாலையில் கழிவுநீரானது மழைநீருடன் கலந்து நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.