தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் வடக்கு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் தார்சாலையில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?