மொடக்குறிச்சி ஒன்றியம் புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள கம்பத்தீஸ்வரன் குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேறு இடத்தில் குப்பைகள் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?