விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளம் மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் சிலர் குப்பையில் தீ வைத்த செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.