புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கணபதிபுரம் கிராமத்தில் இருந்து கந்தர்வக்கோட்டை செல்லும் சாலை அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் சாலையோரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நோய்த்தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி, குப்பைகளை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.