பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அங்கு மழை போல் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.