சுகாதார சீர்கேடு

Update: 2024-12-01 10:04 GMT

தஞ்சை மாவட்டம் கூத்தூர் ஊராட்சியில் அம்பேத்கார்புரம் உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் குவிந்துகிடக்கிறது.சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு  கொட்டப்படும் குப்பைகளால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மூக்கை மூடியபடி சாலையில் நடந்து செல்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பேத்கார்புரம் பகுதியில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்