மதுரை ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர் பகுதி பொன்மாரி நகர் அருகே உள்ள சாலையின் ஓரங்களில் சிலர் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். மேலும் சிலர் இறைச்சி கழிவுகளையும் கொட்டிச்செல்வதால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காலை நேரங்களில் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?