கோவை கலெக்டர் அலுவலக பின்புறத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால், அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.