கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், கரூர் தேசிய நெடுஞ்சாலை டாக்ஸ்மாக் கடை அருகில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பைகள் காற்று அடிக்கும்போது சாலையில் பறந்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது இவற்றில் மழை நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.