சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குப்பைகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.