குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-11-03 12:34 GMT

சிங்காநல்லூர் டி.என்.எச்.பி. காலனி நேதாஜி புரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை தெருநாய்கள் சிதறடித்து போடுகின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குப்பை கொட்டப்பட்டு உள்ள பகுதியில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்