வாணாபுரம் அருகே வடமாமாந்தூர் சுகாதார வளாகம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.