பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் அங்கு பல நாட்களாக குப்பை தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேங்கி கிடைக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.