கரூர் ரெட்டிபாளையத்தில் உள்ள சாலையோரத்தில் மலைப்போல் குப்பைகள் பல மாதங்களாக குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருதால் குப்பைகள் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.