திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. அதில் 7-வது பிரதான சாலையில் குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் இன்னும் மோசமாகி விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.