பூதப்பாண்டியில் ஜீவா பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் அருகில் அந்த பகுதியில் உள்ள சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றுவதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க அறிவிப்பு பதாகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளியப்பன், இறச்சகுளம்.