பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் சிறுநாயக்கன்குளம் உள்ளது. இந்த குளத்தை ஒட்டி செல்லும் தாராபுரம் சாலையோரத்தில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். சில நேரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை கொட்டி தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.