குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-10-13 13:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கால்நடை மருந்தகம் அரசு கோழி பண்ணை கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை திருவரங்குளம், வேப்பங்குடி, காயம்பட்டி, மானாம்பட்டி, பெரியநாயகிபுரம், நிம்பனேஸ்வரன், தேத்தாம்பட்டி, இடையன் வயல், பாப்பா வயல், கிட்டக்காடு உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதன் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான குப்பைகள் பொட்டப்பட்டு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்