வடலூர் அருகே வடகுத்து செல்லும் சாலையில் வீராணம் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இதன் சுவரையொட்டி அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சென்னை- கும்பகோணம் சாலையில் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.