திருவள்ளூர் மாவட்டம் பருத்தி பட்டுயில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் முகத்துவாரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செய்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு நடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.