மதுரை மாநகர், தாசில்தார் நகர், முகவை தெரு கிழக்கு பகுதியில் இறைச்சி கழிவு மற்றும் குப்பைகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?