கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பாலத்துறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த புகழூர் வாய்க்கால் பாலத்தின் அருகே உள்ள மேட்டுப்பகுதியில் வாய்க்காலை ஒட்டியுள்ள செயல்பட்டு வரும் டீ, பலகாரம், ஓட்டல், பேக்கரி கடைக்காரர்கள் தங்களது கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. மேலும் சிலர் இறந்தவர்களின் உடைமைகளில் வந்து கொட்டுகின்றனர். சில நேரங்களில் அந்த உடைமைகள் தண்ணீரில் விழுந்து செல்கிறது. இதனால் புகழூர் வாய்க்கால் தண்ணீர் மாசடைந்து வருகிறது .எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.