கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள மூல வைகையாறு மற்றும் பாலுத்து ஓடையில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வைகையாறு, ஓடையும் மாசடைந்து வருகிறது. எனவே கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.